ஆக்ஸிஜன் சுவாசம் பற்றிச் சிறிது தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது. இந்த ஆக்ஸிஜன் சுவாசம் என்பது மூளை ஆற்றலை வலுப்படுத்தவும், படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் கூட உகந்த ஒன்று என்பதால் இது காலம் காலமாக அறிவியல் அறிஞர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் இதை ‘க்ரியேடிவ் ப்ரெத்’ (Creative Breath) என்கிறோம்.  test

மரத்தின் பயன்கள்

தொழில் வளர்ச்சியின் காரணமாக அதிகரித்த தொழிற்சாலைகளின் பயன்பாட்டினாலும் மனித தேவையின் பொருட்டு அதிகரித்த மோட்டார் வாகன பயன்பாட்டினாலும் மாசாக்கப்படும் இந்த சுற்றுச்சூழலை சுத்தம் செய்பவை இந்த மரங்களே ஆகும்.

இதற்காக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மரங்களே தொழிற்படுகின்றன. மரங்களால் உருவாக்கப்படுகின்ற இந்த ஆக்சிஜன் தான் மனிதனுடைய பிராண வாயு என்பது அனைவரும் அறிந்த விடயமே.

மரங்கள் காற்றை தூய்மை செய்கின்றன. மிருகங்கள் பறவைகள் என அனைத்து உயிர்களையும் வெயிலில் இருந்து காக்க நிழலையும் தருகின்றன.

மரங்கள் அழிவதற்கான காரணங்கள்

மரங்களானவை மனித செயற்பாடுகளினாலும் இயற்கை காரணங்களாலும் அழிவடைகின்றன.

மரங்களை அழிக்கும் மனித செயற்பாடுகளாக சேனைப் பயிர்ச்செய்கை, நகராக்கம், கட்டுமான தேவைகளுக்காக அதிகளவில் மரங்களை வெட்டுதல், சுரங்கம் அகழ்தல், வீதிகள் அமைத்தல், குடியிருப்புகள் அமைத்தல், காட்டு தொழில்களுக்காக காடுகளுக்கு தீ வைத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

மரங்களை அழிக்கும் இயற்கைக் காரணிகளாக காட்டுத்தீ, நிலச்சரிவு, நிலநடுக்கம், சூறாவளி, வெள்ளப்பெருக்கு, வறட்சி போன்றவற்றை குறிப்பிடலாம்.